வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் வருடங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்னும் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் சில நடிகர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் ஹீரோயின்களையே ஜொள்ளு விட வைக்கும் 90ஸ் ஹீரோக்கள் பற்றி இங்கு காண்போம்.

பிரசாந்த்: ஆண் அழகனாக இருக்கும் இவருடைய தோற்றமும், வசீகரமான சிரிப்பும் 90 காலகட்ட பெண்களை மிகவும் கவர்ந்தது. தமிழில் முன்னணி நடிகராக ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை. அப்படி நடிக்கும் படங்களும் இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் இவர் இன்றைய நாயகிகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கிறார்.

Also read : மாணவியை காதலித்து மணமுடித்த மாதவன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை கதை

ராம்கி: ரஜினி, கமல் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்திலேயே இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அன்றைய பெண்களின் கனவு நாயகனாக இருந்த இவர் பல ஹீரோயின்களுக்கும் பிடித்த ஹீரோவாக இருந்தார். சமீபத்தில் கூட குஷ்பூ இவருடைய ஹேர் ஸ்டைல் பற்றி மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார்.

அப்பாஸ்: சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவர் சிம்ரன், ரம்பா உள்ளிட்ட பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். வெளிநாட்டு மாப்பிள்ளை, பணக்கார பையன் போன்ற கேரக்டரில் அதிகமாக நடித்திருக்கும் இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றனர். இப்போது அவர் அதிகம் நடிக்காவிட்டாலும் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாகவே இருக்கிறார்.

Also read : வெளியில் தெரியாமல் வெச்சி செய்யும் அரவிந்த்சாமி.. அடேங்கப்பா பாஸ்கர் ஒரு ராஸ்கல் தான்

மாதவன்: மேடி என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் அலைபாயுதே உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோவாக இருந்த இவருக்கு இப்போதும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரகுமான்: 80, 90 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நன்றாக நடனம் ஆட கூடியவர். இப்போது வில்லன் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவரை பல ஹீரோயின்களுக்கு பிடிக்கும்.

அரவிந்த்சாமி: பெண்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள பெருமை இவருக்கு உண்டு. அப்போதைய காலகட்டத்தில் எல்லாம் பெண்கள் தங்களுக்கு அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்பார்களாம். அந்த அளவுக்கு இவரின் மேல் பைத்தியமாக இருந்த பெண்களும் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் கொடுத்த இவருடைய மறுபிரவேசம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Also read : இளைஞர்கள் மத்தியில் இன்னும் க்ரஷ் ஆக உள்ள 6 நடிகைகள்.. 50 வயதிலும் அசால்ட் பண்ணும் ஆன்ட்டிகள்

Trending News