சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஊசி போட்டு உடல் எடையை ஏற்றிய மோகன் பட ஹீரோயின்.. மகனுக்காக எடுத்த விபரீத முடிவு

Steroid Injection: பொதுவாக தற்போது இருக்கும் கதாநாயகிகள் தான் தங்கள் அழகிற்காக செயற்கையாக பல விஷயங்களை செய்து கொள்கிறார்கள் என்ற கண்ணோட்டம் எப்போதுமே மக்களிடம் உள்ளது. 90 களை சேர்ந்த ஹீரோயின்கள் எல்லோருமே இயற்கையான அழகு உடையவர்கள் என்றும், அவர்கள் தங்களுடைய வசீகரத்திற்காக செயற்கை நோக்கி சென்றதில்லை என்றும் நிறைய பேர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 90 ஹீரோயின் ஒருவர் தற்போது ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார்.

90களில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி ஹீரோயினாக இருந்த அந்த நடிகை, தென்னிந்திய சினிமா அனைத்திலும் கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்தார். ரொம்பவும் மெலிதான தேகத்துடன் இருக்கும் அந்த நடிகை, உடல் எடையை ஏற்றுவதற்காக ஸ்டிராய்டு ஊசி போட்டுக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

Also Read:ஆடை குறைப்பு செய்தும் கிடைக்காத வாய்ப்பு.. சோசியல் மீடியாவே கதியாக இருக்கும் பப்ளி நடிகை

முரளி, விஜயகாந்த், மோகன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நளினி தான் அந்த நடிகை. முன்னணி ஹீரோயினாக இருக்கும் பொழுதே இவர் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வெற்றி படங்கள் கொடுத்தாலும், தனக்கு சினிமாவில் நடிப்பதே பிடிக்காது, எதார்த்தமான வாழ்க்கை வாழவே விரும்பினேன் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய அம்மா உடல் எடை விஷயத்தில் ரொம்பவும் கண்டிப்புடன் இருந்து கொண்டதாகவும், சாப்பிடுவதற்காகவே திருமணம் செய்து கொண்டேன் என்று கூட அந்த பேட்டியில் சொன்னார்.

நடிகர் ராமராஜனுடன் ஆன விவாகரத்திற்கு பிறகு சின்னத்திரையில் நடிக்க வந்த நளினியை பார்த்து எல்லோருமே மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் எடை தான். ஊசி போல இருந்த நளினி திடீரென பயங்கரமாக உடல் எடை கூடியிருந்தார். தனக்கு உடல் எடை கூடியதற்கு காரணமே தான் போட்டுக் கொண்ட ஸ்டிராய்டு ஊசி தான் என்றும், அதை விருப்பப்பட்டே போட்டுக் கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

Also Read:ஒரே படத்தில் 5 நடிகைகளுடன் ஜோடி போட்டும் கிசுகிசுவில் சிக்காத ஹீரோ.. கெட்ட நேரத்தால் வாழ்க்கையை தொலைத்த சூர்யா பட வில்லன்

அவருடைய மகன் மேலும் நீங்கள் இதற்கு மேல் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து என்ன செய்யப் போகிறீர்கள், விருப்பப்பட்டதை சாப்பிடுங்கள் என்று சொன்னாராம். அதையும் அப்படியே தொடர்ந்து வந்ததால் அதீத உடல் எடை கூடி இருக்கிறார் நடிகை நளினி. மேலும் தன்னுடைய எடை கூடிய உடல் தனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றும் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நளினி பல சீரியல்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றார். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நளினி.

Also Read:வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. நண்பருடன் சேர்ந்து அலங்கோலப்படுத்திய நடிகர்

Trending News