செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் 5 தொகுப்பாளர்கள்.. நீங்கள் கேட்ட பாடல் முதல் பெப்சி உமா வரை

சினிமா துறையை பொறுத்த வரையிலும் சின்னத்திரையின் ஃபேவரட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் என்றால் உடனே அனைவருடைய சாய்ஸாக இருப்பது 90ஸ் தொகுப்பாளர்கள் தான். அந்த அளவிற்கு தாங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் மூலம் காலங்கள் கடந்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அப்படியாக 90ஸ் கிட்ஸ்ன் ஃபேவரிட் தொகுப்பாளர்களாக இருந்த 5 பிரபலங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

சுரேஷ் குமார்: சன்டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வந்த டாப் 10  படங்களின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் சுரேஷ்குமார். அதிலும் புது படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன் இவருடைய விமர்சனங்களை பார்த்த பிறகே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திறமையான விமர்சனங்களை கொடுக்கக் கூடியவராக திகழ்ந்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியானது ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் ஒன்றாகவே இருந்துள்ளது.

Also Read: சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் 7 தொகுப்பாளர்கள்.. முத்தத்தால் சிக்கிய டிடி

விஜயசாரதி: சன் டிவியில் முன்னணி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் விஜயசாரதி. அதிலும் நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவரானார். அதிலும் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், சுற்றுலாத்தலங்கள் பற்றிய விவரங்களை மிக அருமையாக விளக்கி கூறுவார். மேலும் இவருடைய நிகழ்ச்சி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்ற அளவிற்கு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

அனுஹாசன்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கியவர் தான் அனுஹாசன். அதிலும் பல்வேறு திரை பிரபலங்களின் மனம் புண்படாதபடி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர். 

Also Read: படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

விசு: பட்டிமன்றம் என்றால் பல்வேறு கருத்துக்களை விவாதிக்கும் ஒரு மேடையாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது. ஆனால் அவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்தவர் தான் விசு. சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே இருந்து வந்தது. அதிலும் சமூக கருத்துக்கள் பற்றிய விவாதங்கள், நடைமுறை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சம்பவங்கள் என  அனைத்தையும் விவாதிப்பதில் ஹிட்டான நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்தது.

பெப்சி உமா: சன் டிவியில் ஒளிபரப்பான உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பெப்சி உமா. அதிலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக பிரபலமானவர் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள்  மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் பெப்சி உமா என்றால் 90ஸ் கிட்ஸ்க்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனது நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

Also Read: குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்.. ஷெரினை விட அதிகமாக வாங்கும் மைம் கோபி

Trending News