Serial: இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனில் கதைகள் மற்றும் ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 90களின் காலகட்டம் என்பது குழந்தைகளுக்காகவே சீரியல்கள் ஒளிபரப்பான காலகட்டம்.
குழந்தைகளுக்கு பிடித்த மாயாஜால வித்தைகளைக் கொண்டு சீரியல்களை உருவாக்கினார்கள்.
இந்த சீரியல்கள் போடும் டைமுக்கு குழந்தைகள் எங்கே இருந்தாலும் டிவி முன் வந்து அமர்ந்து விடுவார்கள். அப்படிப்பட்ட 5 சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.
சக்திமானை மிஞ்சிய மாயா மச்சீந்திரா!
சக்திமான்: தமிழ்நாட்டில் மாயாஜால சீரியல்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது சக்திமான் சீரியல் தான். பொதிகை டிவியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.
அந்த சமயத்தில் ஒட்டுமொத்த குழந்தைகளும் டிவி முன்பு தான் உட்கார்ந்திருப்பார்கள். அந்த சமயத்தில் சக்திமான் டிரஸ் பெரிய அளவில் பேமஸ் ஆனது.
மை டியர் பூதம்: சமீபத்தில் குடும்பஸ்தன் படம் பார்த்துவிட்டு ஒரு கேரக்டரை மீண்டும் வைரல் ஆக்கினார்கள்.
அந்த அளவுக்கு 90ஸ் கிட்ஸ்களுடன் ஊறிப்போன சீரியல் தான் மை டியர் பூதம்.
இந்த மூசாவுக்கு இப்போது திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் கூட படம் பார்த்துவிட்டு வைரலாகும் அளவுக்கு அந்த சீரியல் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தது.
ஜீபூம்பா: கலர் கலர் பென்சில்கள், அந்தப் பென்சில் முனையில் பஞ்சு வைத்து அதன் மீது தொப்பி போட்டு கண்ணாடியும் போடப்பட்டிருக்கும்.
இந்த பென்சிலுக்கு வீட்டில் அடம் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. இத்தனைக்கும் காரணம் ஜீபூம்பா சீரியல் தான்.
இந்த சீரியலை பார்த்துவிட்டு நிஜமாகவே ஜீபூம்பா பென்சிலை வைத்து எது வரைந்தாலும் நேரில் வந்து விடும் என நம்பியதும் ஒரு காலம்.
ஜென்மம் எக்ஸ்: குழந்தைகளை மட்டுமில்லாமல் பெரியவர்களையும் பயத்தில் உறைய வைத்த சீரியல் ஜென்மம் எக்ஸ். விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.
இந்த சீரியலின் படக்காட்சியாக இருக்கட்டும் பின்னணி இசை ஆக இருக்கட்டும் மிரட்டி தூக்கம் வராமல் கூட ஆக்கிவிடும்.
மாயா மச்சீந்திரா: இந்த சீரியலை கிட்டத்தட்ட சக்திமானின் தமிழ் வெர்ஷன் என்று கூட சொல்லலாம். இதில் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்திருந்தார்.
சக்திமானை போலவே சாதாரண நேரங்களில் ஹீரோ சாதுவாக இருந்து, பிரச்சனை வரும்போது மாயா மச்சீந்திராவாக மாறுவார்.
இவரை கண்டுபிடிக்க வரும் வில்லன் எந்நேரமும் சுடுகாட்டில் தான் இருப்பார். இந்த சீரியல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது