தற்போது உள்ளதுபோல ஆளுக்கு ஒரு மொபைல் போன், வீட்டில் உள்ள எல்லா அறையிலும் தொலைக்காட்சி என்பது போல 90’s காலகட்டத்தில் இல்லை. வீட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் குடும்பத்துடன் குழந்தைகள் பெரிதும் விரும்பிப் பார்த்த ஐந்து தொடர்களை பார்க்கலாம்.
சக்திமான் : 90 கிட்ஸ் பேவரைட் தொடரில் முதல் இடத்தை பிடித்த தொடர் சக்திமான். இத்தொடர் 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இத்தொடரை தயாரித்து, நடித்தவர் பிரபல இந்தி நடிகர் முகேஷ் கண்ணா. அந்த காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆனாலே குழந்தைகள் சக்திமான் தொடரை பார்க்க ஆர்வமாக காத்திருப்பார்கள்.
மர்ம தேசம் : மர்மதேசம் தொடர் 1995 லிருந்து 1998 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இத்தொடரில் பூவிலங்கு மோகன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சேத்தன், ராம்ஜி போன்றோர் நடித்திருந்தனர். மர்மதேசம் விடாதுகருப்பு தொடரைப் பார்த்து இரவில் தனியாக செல்லவும் பலர் பயப்பட்டனர். இத்தொடரை ராஜ் தொலைக்காட்சியும், வசந்த் தொலைக்காட்சியும் மறு ஒளிபரப்பு செய்தனர்.
மை டியர் பூதம் : பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான தொடர் மை டியர் பூதம். இத்தொடர் கிட்டத்தட்ட 900 எபிசோடுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இத்தொடரில் மூசா வா மூசா வா என்ற வசனத்தை குழந்தைகள் அடிக்கடி முணுமுணுத்தனர். மை டியர் பூதம் தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தற்போது படங்களில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.
சித்தி : ராதிகா சரத்குமார், சிவகுமார், யுவராணி ரவீந்திரன், சுபலேகா சுதாகர் ஆகியோர் நடிப்பில் வெளியான தொடர் சித்தி. இத்தொடரை ராதிகாவின் ராடான் மீடியாவொர்கஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்தொடர் 1999 இலிருந்து 2001 வரை ஒளிபரப்பானது. கண்ணின் மணி கண்ணின் மணி என்ற இத்தொடரின் பாடல் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மகாபாரதம் : புராணக் கதையை குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைத்த தொடர்தான் மகாபாரதம். இத்தொடர் 1988லிருந்து 1990 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதிகாச தொடரான மகாபாரதம், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி பார்த்தனர்.