கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமா உலகமே கேலி செய்து பேசிவரும் இயக்குனர் என்றால் அது முருகதாஸ் தான். தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, ஏழாம் அறிவு போன்ற மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த இயக்குனருக்கே இந்த கதியா? என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றன.
சமீபகாலமாக முருகதாஸ்-ன் படங்கள் அவ்வளவாக மக்களைக் கவரவில்லை. தர்பார் படம் பெரிய அளவில் வசூல் செய்தாலும் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு ரஜினி வீட்டுக்கும் முருகதாஸ் வீட்டுக்கும் படையெடுத்தனர். இருவரிடமும் எந்த ஒரு பதிலும் வருவதாய் தெரியவில்லை.
இதனால் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 168 படம் எந்த அளவிற்கு வியாபாரம் நடக்கப் போகிறதோ என தமிழ் சினிமா உலகமே கழுகு போல் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி ஏ ஆர் முருகதாஸ் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி போலீசாரிடம் கேட்டறிந்தார். அப்போது போலீசார் முருகதாஸ்க்கு இந்த வழக்கு தொடர்ந்து செயல்படுவதில் ஈடுபாடு இல்லை எனவும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நீதிபதி, அவரவர்கள் இஷ்டத்திற்கு கோர்ட் செயல்பட வேண்டுமா? இனிமேல் இதுபோன்று நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோர்ட் எச்சரித்துள்ளது. ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுசன்.. இப்படி ஆயிட்டாரே!