திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தனுஷுடன் ஒரே படம்தான்.. அந்த மரண அடியிலிருந்து எழ முடியாமல் தவிக்கும் பிரபல இயக்குனர்

தனுஷுக்கு வெற்றி படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தோல்விப்படம் கொடுத்து சினிமா ரசிகர்களால் மறக்கப்பட்ட இயக்குனராக மாறியவரை நினைத்தால்தான் சோகமாக இருக்கிறது.

தனுஷும் தமிழ் சினிமாவில் தட்டுத் தடுமாறித் தான் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கொடுக்காத பிளாப் படங்களே கிடையாது. தனுஷின் கேரியரில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை நீக்கிவிட்டால் வெற்றி சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கும்.

குறிப்பாக வெற்றிமாறன் படங்களே தனுசை வசூல் ரீதியாக அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்துச் சென்றது. அதேபோல் தனுஷை வைத்து படம் இயக்க ஆசை பட்டு தற்போது ஒரு வெற்றி கூட கொடுக்க முடியாமல் திக்கித் திணறும் இயக்குனர்தான் பிரபு சாலமன்.

தனுஷுடன் இவர் எடுத்த ஒரே படம் தொடரி. கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத அந்த படத்தை எப்படி எடுத்தார் என்பது அவருக்கும் தெரியவில்லை, தனுஷுக்கும் தெரியவில்லை. முதல் நாள் முதல் காட்சியிலேயே படம் படுதோல்வியை சந்தித்தது.

ஆரம்பத்தில் லீ, கொக்கி போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரபுசாலமன் அதன்பிறகு கொடுத்த மைனா திரைப்படம் அவருக்கு பெரிய அளவு பெயரை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து வெளிவந்த கும்கி படம் வசூலில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதன் பிறகு வெளிவந்த கயல் திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு ஓடியது. ஆனால் தனுஷ் நடித்த தொடரி திரைப்படம் பிரபு சாலமனை அதலபாதாளத்தில் தள்ளியது. இதனால் எப்படியாவது வெற்றி கொடுக்க வேண்டும் என கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வைத்துள்ளார்.

thodari-cinemapettai
thodari-cinemapettai

மேலும் காடன் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களின் வெற்றியே பிரபுசாலமன் இனி வருங்காலத்தில் இயக்குனராக தொடர்வாரா என்பதை நிரூபிக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

- Advertisement -

Trending News