சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலர் காதல் கதைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அது ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நடிகர்கள் செய்வதுதான் கவலையாக இருக்கிறது.
அந்த வகையில் நயன்தாராவுக்கு பிறகு அதிக காதலர்களை மாற்றம் நடிகையாக முன்னாள் நடிகையின் மகள் இருந்து வருவது சினிமா வட்டாரங்களில் பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நயன்தாரா தான் அந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார். முதலில் சிம்பு பின்னர் பிரபுதேவா கடைசியாக தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வளர்த்து வருகிறார். இடையில் உதயநிதிஸ்டாலின் கூட பஞ்சாயத்து ஏற்பட்டதாக பிரபலம் ஒருவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது நயன்தாராவைப் போலவே பிரபல முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய காதலரை மாற்றி விடுகிறாராம். அந்த வகையில் தற்போது புதிய காதலருடன் கோவாவில் குத்தாட்டம் போட்டு வருகிறார்.
ஜான்வி கபூர் முதலில் சிகர் பாகாரிய என்பவரை காதலித்து வந்ததாக வதந்திகள் பரவியதை தொடர்ந்து தற்போது இளம் நடிகர் இஷான் கட்டர் என்பவருடன் காதலை வளர்த்து வந்தார். ஆனால் இப்போது கார்த்திக் ஆரியன் என்ற நடிகருடன் ஊர்சுற்றி வருவதாக வட இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் கிசுகிசுத்து வருகின்றனர். சமீபத்தில்கூட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.
ஜான்வி கபூர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜான்வி கபூர் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் இருவரும் நண்பர் தான் எனவும் இருவருக்குள்ளும் வேறு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் கூறிவிட்டாராம்.