சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது படக்குழுவினர் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதைவிட முக்கியமாக ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை மறந்து விட முடியாது.
திடீரென ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அரசியலுக்கு வர முடியாது எனவும் உறுதியாக தெரிவித்து விட்டார்.
ஆனால் அண்ணாத்தை படப்பிடிப்பை பற்றி செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட நாள் கழித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து சில செய்திகள் கிடைத்துள்ளது.
அதில் ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஜூன் அல்லது ஜூலை யில் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம். ரஜினி இப்போது சரியாக வருவாரோ அப்போதுதான் அண்ணாத்தை படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
மேலும் சிறுத்தை சிவாவும் அண்ணாத்த படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக மாட்டேன் என கூறி விட்டாராம். ஆனால் அவருக்கு சீயான் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரின் படவாய்ப்புகள் இந்த ஊரடங்கு சமயத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய கார்ப்பரேட் கொள்கையையும் விட்டுக்கொடுத்து ரஜினி வந்தால் மட்டும் போதும் என்று கூறுவதே தமிழ் சினிமாவின் ரஜினியின் உயரம் என்னவென்று தெரிய வந்துள்ளது.