புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

10 வருடங்களுக்கு முன்பே விஜய் சேதுபதியை கணித்த கார்த்திக் சுப்புராஜ்.. வைரலாகும் பதிவால் திகைத்து போன கோலிவுட்

தனது இயல்பான தோற்றத்தினால் மக்களின் மனதில் தனக்கென சிம்மாசனம் அமைத்து ராஜாவாக அமர்ந்திருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்பதை துறந்து வில்லன், குணச்சித்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தனித்துவத்துடன் நடிப்பதில் கெட்டிக்காரர்.

எனவே ‘விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக மாறுவார் என்று முன்பே கணித்து இருந்தேன்’ என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் இந்த பதிவுடன் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியிலும் பகிர்ந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் வெளியானபோது விஜய் விஜய்சேதுபதியை பெரிய திரையில் பார்க்க, மிகவும் ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்துள்ளேன் என விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது ஒரு ரசிகர், ‘யார் விஜய்சேதுபதி?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

vijay-sethupathi-cinemapettai

அதற்கு கார்த்திக் சுப்புராஜ், ‘அவரை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்!’ என்று பதில் அளித்துள்ளார். ஆகையால் தென்மேற்கு பருவக்காற்று படம் வெளியாவதற்கு முன்பே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பார் என்று யூகித்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’ படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய்சேதுபதிக்கும் கார்த்திக் சுப்புராஜ்க்கும் இந்தப் படம் அவர்களுடைய வாழ்க்கையில், மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik-Subbaraj-cinemapettai

அதுமட்டுமில்லாமல் அதன்பிறகு ‘இறைவி’, ‘பேட்ட’ ஆகிய படங்களில் இவர்களது கூட்டணி பட்டையை கிளப்பி இருக்கும். அது மட்டுமில்லாமல் இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பல குறும்படங்களில் இணைந்து பணியாற்றியதாலே இத்தகைய கூட்டணிக்கு வலிமை அதிகம் உள்ளது என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

Trending News