ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் அட்லீ புகுந்த தயாரிப்பாளர் வீடு விளங்காது என்கிற ரேஞ்சுக்கு அட்லீயால் தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்களாம்.
ராஜா ராணி என்ற மௌன ராகம் படத்தை எடுத்தவர் தான் அட்லீ. பழைய கதையை இன்றைய கால ரசிகர்கள் ரசிக்கும்படி உருவாக்குவதும் ஒரு தனி திறமை தான். எதிர்பாராத விதமாக ராஜா ராணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார் அட்லீ.
இந்த மூன்று படங்களும் பல்வேறு பழைய படங்களின் காப்பி என பல சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் இதெல்லாம் இன்ஸ்பிரேஷன் என அட்லீ முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதைவிட முக்கியமானது அட்லீயுடன் இணைந்த தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து படம் பண்ண முடியாமல் தடுமாறி வருவதை கோலிவுட் வட்டாரத்தில் முக்கிய பிரச்சினையாக பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அட்லீ, விஜய் கூட்டணியில் உருவான தெறி படத்தின் தயாரிப்பாளர் மட்டும்தான் விவரமாக இருந்து பல லாபம் பெற்றார். ஆனால் அதன்பிறகு மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும் அட்லீயை தங்களுடைய வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு வச்சு செய்துவிட்டார். இந்த இரண்டு படங்களுமே குறித்த பட்ஜெட்டைவிட அதிகபட்ச செலவானதை அந்தந்த படத் தயாரிப்பாளர்களே பலமுறை பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அட்லீயின் மெர்சல் படத்தால் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாம்.
இதனை பிரபல தயாரிப்பாளர் ராஜன் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாகவே தெரிவித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்த படம் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். எப்போதுமே வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் பிகில் படத்திற்கு பிறகு சிறிய பட்ஜெட்டில் கூட ஒரு படம் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.