தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு கோரியோகிராபர்ராக பணியாற்றியுள்ளார் பாபா பாஸ்கர். இவர் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி பொல்லாதவன், மாப்பிள்ளை, வேலையில்லா பட்டதாரி, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேட்டைக்காரன் போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு கோரியோகிராபர்ராக பணியாற்றியுள்ளார்.
இவரது திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது தனுஷ் மற்றும் ராம் சரண் என சமீபத்திய தெலுங்கு சினிமா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற மதுர ஜில்லா மச்சான் தாண்டி எனும் பாடலுக்கும், ராம்சரண் தெலுங்கில் நடித்த பச்ச தர பொம்ம எனும் 2 பாடல் மூலம் தான் தனது திரை வாழ்க்கையில் முக்கிய படமாக உள்ளது என கூறியுள்ளார்.
பல படங்களுக்கு கோரியோகிராபர்ராக பணியாற்றிய பாபா பாஸ்கர். தற்போது விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராக செயல்பட்டு வருகிறார்.
அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பள்ளி பருவ காலத்தில் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம பாபா பாஸ்கர் இப்படி உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஏனென்றால் பாபா பாஸ்கர் எப்போதுமே சட்டையில் முதல் பட்டன் போடாமல், கழுத்தில் கர்சிப் கட்டியபடி ரவுடி கெட்டப்பில் தான் இருப்பார். ஆனால் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒன்னும் தெரியாத அப்பாவி போல உள்ளார் என கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.