வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

முத்தின கத்திரிக்கா பிரியாமணியா இது? 12 கிலோ உடல் எடை குறைத்து ஸ்லிம்மா மாறிட்டாங்களே!

2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியாமணி. ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படத்தில் அறிமுகமாகி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தனுஷுடன் அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் பிரியாமணி நடித்த எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் ஆகா ஓகோ எனும் அளவுக்கு பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படம் வெளியானது. பருத்திவீரன் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்ப முத்தழகு என்ற கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மனதில் பதிந்தார்.

அதன் பிறகு தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து கமர்சியல் சினிமாக்களிலும் நடித்து வந்தார். அங்குதான் பிரியாமணி தவறான முடிவெடுத்தார் என்றுகூட சொல்லலாம். பிரியாமணி கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்த எந்த படமும் தமிழில் வெற்றி பெறவில்லை.

தமிழில் வெற்றி பெறாத நடிகைகளை கூட்டிக்கொண்டுபோய் தெலுங்கில் கொஞ்ச காலம் வைப்பது அவர்களின் பழக்கம். அந்த வகையில் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்த பிரியாமணி மார்க்கெட் இல்லாத போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். அந்த வகையில் வெப்சீரிஸ் ஒன்றில் தற்போது நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற அசுரன் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

priyamani-cinemapettai
priyamani-cinemapettai

இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவு பட வாய்ப்பு வரும் என நம்பிக்கொண்டிருக்கும் பிரியாமணி கிட்டத்தட்ட 12 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

priyamani-cinemapettai-02
priyamani-cinemapettai-02

Trending News