செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரசிகர்களை உற்சாகப்படுத்த வரிசையாக வெளிவர காத்திருக்கும் புதிய படங்கள்.. குஷியில் தியேட்டர் உரிமையாளர்கள்

கொரோனா வைரஸ் பிரச்சினை தொடங்கிய பிறகு, மிகவும் அடிவாங்கிய துறைகளில் மிக முக்கியமானது சினிமாத்துறை தான். அதிலும் குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஏனென்றால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வரிசையாக வெளியாகி, மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று தியேட்டர் உரிமையாளர்களின் வயிற்றில் புளி கரைக்க செய்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம்தான். வெளியான கொஞ்ச நாட்களிலேயே உலகில் உள்ள அனைத்து கலெக்ஷன் ஹிஸ்டரியையும் தகர்த்தியதோடு, தியேட்டர் உரிமையாளர்களின் நெஞ்சில் பாலை வார்த்தது. அதாவது தியேட்டர்களுக்கு மாஸ்டர் படம் செகண்ட் இன்னிங்சை தொடங்கி வைத்தவை தொடர்ந்து வரிசையாக படங்கள் ரிலீஸாகி கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி மூன்று படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தப் படங்களின் லிஸ்ட் இதோ!

ஆட்கள் தேவை – இயக்குனர் சக்தி சிவன் இயக்கத்தில் சக்தி சிவன், மைம் கோபி நடித்திருக்கும் திரைப்படம்.

aatkal-thevai-cinemapettai

ட்ரிப் – இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், சுனைனா நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்.

trip-cinemapettai

களத்தில் சந்திப்போம் – இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம்.

kalathil-santhippom-cinemapettai

எனவே பிப்ரவரி மாதம் தொடர்ந்து கோலிவுட்டில் வரிசையாக படங்கள் களம் இறங்குவதை எண்ணி தியேட்டர் உரிமையாளர்கள் குஷியாக உள்ளனராம்.

Trending News