தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலருடன் பத்தாவது ஆண்டை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
பத்து வருடத்திற்கு முன்னாடி இருவரும் ஜூஸ் குடித்தது போலவே தற்போதும் அதே மாதிரி ஒரு புகைப்படத்தை எடுத்து இரண்டையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் அதிகம் படங்கள் வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் பிரியா பவானி சங்கர். நயன்தாராவே இவருக்கு அடுத்ததுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அந்த அளவுக்கு முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்தும் பிரியா பவானி சங்கர் வசம் தான். அதுமட்டுமில்லாமல் தற்போது தெலுங்கு சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விட்டாராம்.
பிரியா பவானி சங்கர் நடிக்கும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படம் 5 மொழிகளில் வெளியானால் பிரியா பவானி சங்கர் மார்க்கெட் உச்சத்திற்கு சென்று விடுமாம். அதன்பிறகு நயன்தாரா மார்க்கெட்டை விட்டே காணாமல் போய் விடுவார் எனும் அளவுக்கு உசுப்பேற்றி வருகின்றனர்.
மேலும் நயன்தாராவைப் போலவே பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவிற்கு வந்த புதிதில் நிறைய காதல் சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக பிக் பாஸ் கவின், மூத்த நடிகர் எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என பிரியா பவானி சங்கர் உஷாராக தன்னுடைய உண்மையான காதலர் ராஜ்வேல் என்பவரை உலகுக்கு அறிமுகப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.