தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து பட்டைய கிளப்பி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமந்தா தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதிலிருந்து, அம்மணியின் மவுசு பல மடங்காக கூடி விட்டது என்றே கூறலாம்.
தற்போது சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்திருக்கிறார் சமந்தா. இந்த நிலையில் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக அவருடைய ரசிகர்களுடன் பேசி இருக்கிறாராம்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களைப் பத்தி இணையத்தில் வரும் மீம்ஸ் அண்ட் டுரோல்ஸ் பாக்குறப்போ உங்க மனநிலை எப்படி இருக்கும்? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு சமந்தா, முன்பெல்லாம் அதை பார்க்கும்போது எனக்கு தூக்கமே வராது என்றும் அதைப் பற்றி அதிகமாக யோசித்து கவலைபட்டதாகவும் தெரிவித்ததோடு, கொடுமையாக இருக்கும், தற்போதெல்லாம் மீம்ஸ்களை பார்க்கும் போது தனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரின் பல விதமான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்திருக்கிறார் சமந்தா. எனவே சமந்தாவின் லைவ் சாட் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.