வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஒரே மாதத்தில் இரண்டாவது காதலனை கழட்டிவிட்ட வாரிசு நடிகை.. காதலரும் பெரிய தில்லாலங்கடியாமே!

பழைய காதலனை கழட்டி விட்டு இரண்டாவது காதலருடன் ஊர் சுற்றி வந்த பிரபல வாரிசு நடிகை தற்போது அந்த காதலரையும் பிரேக்கப் செய்து விட்டாராம். இந்த செய்தி தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்திய சினிமாவையே தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் ஆட்டிப்படைத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரும் தன் வாழ்நாளில் பல காதல் கதைகளை பார்த்து சலித்துப்போனவர்தான். இறுதியாக தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு அவரின் மகளான ஜான்வி கபூர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் ஏற்கனவே நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகரை சமீபத்தில்தான் பிரேக்கப் செய்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய புதிய காதலரான பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியன் என்பவருடன் கோவாவில் சுற்றித் திரிந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் இருவரது ரகசிய புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, காதலிக்க ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். அந்த நடிகரின் ராசியே அப்படித்தானாம். முன்னதாக அதே இளம் நடிகர் சைப் அலிகான் மகள் சாரா அலி கான் என்பவரை ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது காதலித்தாராம் கார்த்திகேயன்.

ஆனால் சொல்லி வைத்தது போல அந்த படம் முடிவடையும் தருவாயில் இருவரது காதலும் பிக்கப் ஆகி விட்டதாம். தற்போது அதே போல் தான் கார்த்திக் ஆரியன் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் ஒரு படத்தில் நடித்து வந்ததாகவும், தற்போது அந்த படம் இறுதி கட்டத்தில் இருப்பதால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

janhvi-kapoor-karthik-ariyan-cinemapettai
janhvi-kapoor-karthik-ariyan-cinemapettai

இதனால் அந்த படக்குழுவினர் மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பார்களா என்ற கவலையில் இருக்கிறார்கள். ஆனால் ஜான்வி கபூர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாராம்.

Trending News