திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

10 கோடி ஆசை காட்டி பிட்டுக்கு கூப்பிட்ட இயக்குனர்.. உஷாராக ஒதுங்கிய முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகையிடம் வடக்கிலிருந்து வந்த ஆசாமி இயக்குனர் ஒருவர் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க 10 கோடி வரை பேரம் பேசியும் முடியாது என்று கூறிவிட்டாராம் அந்த நடிகை.

தற்போதைய நம்பர் ஒன் நடிகை அவர்தான். நாளுக்கு நாள் சம்பளத்தை ஏற்றுவதில் குறியாக இருக்கிறார். வயது 37 ஆனாலும் இன்னமும் அம்மணிக்கு மவுசு குறையவில்லை. படத்துக்கு படம் ஏறுமுகம்தான்.

மொத்த இந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வரும் அந்த முன்னணி நடிகை வடக்கே மட்டும் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். வடக்கில் நடிகைகளை நடிகர்கள் எப்படி போட்டு பொரட்டி எடுப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அதற்கு பயந்து போகாமல் இருக்கிறாரா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பதை நான்கு பேர் கொண்ட குழு அலசி ஆராய்ந்து வருகிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். தற்போது பணத்தில் குறியாக இருக்கும் அந்த நடிகையை டார்கெட் செய்து வடக்கிலிருந்து ஒரு குரூப் வந்துள்ளது.

பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப்சீரிஸ் ஒன்று இருப்பதாகவும் அதற்காக கிட்டதட்ட பத்து கோடி சம்பளம் கொடுப்பதாகவும் பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் கூறிய கதையில் நடிகைக்கு நடிகருடன் படுக்கையறை காட்சி, உதட்டு முத்தக்காட்சி என நெருக்கம் அதிகமாக இருந்ததாம்.

ஓடிடி என்றாலே பிட்டு படம் தான் என்கிற அளவுக்குத் தான் வெப் சீரிஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பணம் அதிகமாகக் கொடுத்தாலும் தற்போது மவுசு இருக்கும் நேரத்தில் இப்படி நடிக்க கூடாது என யோசித்து அந்த ஆஃபரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் முன்னணி நடிகை.

இந்த நடிகையின் சமயோஜித புத்தியை பார்த்து மொத்த கோலிவுட்டும் ஆடி போய்விட்டதாம். இப்படியெல்லாம் யோசித்து சரியாக கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் தான் இப்போதும் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் என கிசுகிசுக்கிறார்கள்.

Trending News