தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜீத் சமீபத்தில் ஒரு புதிய தெலுங்கு படத்தின் டிரைலரை பார்த்து விட்டு மிகவும் பிடித்ததாக அந்த படக்குழுவினருக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்தது தற்போது வைரல் ஆகியுள்ளது.
தல அஜித் எப்போதும் வெளியில் வர மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. ஆனால் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது அவரது வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.
தல அஜித் பலருக்கும் தெரியாமல் உதவி செய்வார் எனவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிக்கடி வெளியாகும். அந்த வகையில் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் சென்றிருந்த இடத்தில் ஒரு பையனுக்கு கல்வி உதவி செய்ததாகவும் செய்திகள் வந்தன.
அதேபோல் தனக்கு அஜித் ஒரு படம் பிடித்திருந்தாலும் உடனே போன் செய்து அவர்களைப் பாராட்டும் எண்ணம் கொண்டவராம். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் பைக் ரேசிங்கை மையப்படுத்தி இதே மா கதா என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.
இதில் நடிகர் நடிகைகளாக சுமந்த், பூமிகா சாவ்லா, தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த டீசர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்தவுடனேயே தல அஜித்திற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக படக்குழுவினருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தாராம்.
மேலும் இந்த டீசரை தன்னுடைய வாழ்க்கையுடன் ஈசியாக பொருத்திப் பார்க்க முடிகிறது எனவும், பைக் சேசிங் சீன்களை காட்சி செய்த விதமும் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.