விஜய் டிவியில் அதிகமான அளவில் நெட்டிசன்கள் வறுத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா என்ற பெயரில் ஃபரினா ஆசாத் நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதனை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடல் செய்வதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மிகவும் உதவியாக இருப்பதால், பல நடிகைகள் இது போன்ற உரையாடல்களை தற்போது செய்து வருகின்றனர்.
அதில் ஒரு நெட்டிசன் வெண்பாவிடம் உள்ளாடையின் சைஸை கேட்டதற்கு நெத்தியடி பதிலாக உங்க அக்கா, அம்மா சைஸ் தான் என்று தெரிவித்துள்ளார். நெட்டிசன் தான் இவ்வளவு கேவலமாக கேள்வி கேட்கிறார்கள் என்றால் சீரியல் நடிகைகள் ஏன் இதை பிரபல படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
இப்படி அநாகரிகமான வார்த்தைகளால் அவர்கள் கேட்ட கேள்விகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் இதை படம் பிடித்து போட்டோ போட்டு தான் ஒரு தைரியமான பெண் என்பதைக் கூற வருகிறாரா.? இல்ல விளம்பரமா என்றும் தற்போது சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இது போன்ற கேள்விகளுக்கு நடிகைகள் மௌனம் சாதிப்பது நல்லது இல்லை என்றால் தாங்களாகவே தங்களை அசிங்கப்படுத்தி கொள்கிறார்கள் என்று தான் கூறுவார்கள்.