இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகராக வலம் வரும் முன்னனி நடிகர் ஒருவர் தன்னுடைய இளமைக் காலங்களில் காதலித்துக் கொண்டிருக்கும் போது காதலியை சந்தோஷப்படுத்த முடியாததால் அவரை விட்டுச் சென்றதாக ஒரு பொதுப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சினிமாவே அறியப்படும் நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். அக்ஷய்குமார் நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் சமீபத்தில் வெளியான லட்சுமி பாம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான உருவான அந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் காமெடி காட்சிகள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதாம்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அக்ஷய் குமார் தன்னுடைய முதல் காதல் பற்றி குறிப்பிட்டுள்ளார். முன்னரெல்லாம் அக்ஷய்குமார் மிகவும் கூச்சமான மனிதராம். ஒருவரின் முகத்தை பார்த்து பேசவே யோசிப்பாராம்.
அதே போல் அவ்வளவு எளிதில் பெண்களின் கையை பிடித்து பேச மாட்டாராம். அப்படிப்பட்ட அக்ஷய்குமாரிடமிருந்து முன்னாள் காதலி திருமணத்திற்கு முன்பே தன்னை காதலர் கட்டி பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும், சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைத்தாராம்.
ஆனால் அக்ஷய்குமார் அப்போது கூச்சத்தால் அப்படி செய்யாமல் விட்டு விட்டாராம். இதனால் உனக்கும் எனக்கும் செட் ஆகாது என டாட்டா காட்டி விட்டாராம் அந்த இளம்பெண். இதனை 20 வருடம் கழித்து குறிப்பிட்டுள்ளார் அக்ஷய் குமார்.