தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது.
சூர்யா தற்போது கைவசமாக பல படங்களை வைத்துள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டான காக்க காக்க மற்றும் கஜினி போன்ற படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. ஏன் நீங்களே அதில் நடிக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சூர்யா ஒரு செயலை செய்து முடித்து விட்டால் அது மறுபடியும் செய்யத் தோன்றாது. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன் மற்றும் 12 வகுப்பில் வெற்றி பெற்றவன் மறுபடியும் தேர்வு எழுத ஆசை படுவார்களா.?
அதேபோலத்தான் ஒரு செயலை சிறப்பாக செய்து முடித்து விட்டால் அடுத்து எந்த செயல் செய்யப் போகிறோமா அதன் மீது கவனம் செலுத்தி அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்று தெளிவுப்படுத்தி உள்ளார் சூர்யா.
இதனைக்கேட்ட ரசிகர்கள் சூர்யா சொன்ன பதிலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் எடுத்த முடிவு சரி தான் எனவும் கூறி வருகின்றனர்.