சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை வளைத்து போட்ட டோலிவுட் மெகா ஸ்டார்.. தல நீங்க வேற ரகம்!

கோலிவுட்டில் தல அஜித்திற்கும், அவருடைய படங்களுக்கும் உள்ள வரவேற்பு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால், ரசிகர் மன்றமே இல்லாமல் பல ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருக்கிறார் தல.

தற்போது தல அஜித் ‘வலிமை’ படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக் ரைடில் ஈடுபாடு செலுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் இந்த செய்தியைப் பற்றிய அப்டேட்களை தல ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தொடர்ந்து அஜித் படங்களின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது தெலுங்கு திரையுலகின் சீனியர் ஹீரோவாக வலம் வருபவர் தான் சிரஞ்சீவி. இவர் டோலிவுட்டிற்கு ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திய சிரஞ்சீவி, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைபட்டதும் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் என்ட்ரி கொடுத்து, டோலிவுட்டை அதிர வைத்தார்.

தற்போது ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துவரும் சிரஞ்சீவி, அடுத்ததாக மலையாளத்தில் ஹிட் அடித்த ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக்கிலும், தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளாராம்.

இவ்வாறிருக்க, சிரஞ்சீவி தல அஜித்தின் ரீமேக் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதாவது தல அஜித் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம். இதனால் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கான தெலுங்கு ரீமேக் உரிமையையும் சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி வைத்துள்ளதாம்.

chiranjeevi-ajith-cinemapettai-1
chiranjeevi-ajith-cinemapettai

மேலும் சிரஞ்சீவி வரிசையாக கமிட்டான படங்களை எல்லாம் முடித்துவிட்டு, என்னை அறிந்தால் படத்தின் ரீமேக்கை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தல அஜித்தின் படத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் நடிக்க ஆர்வம் காட்டிவரும் இந்த தகவலை தல ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து, தல அஜித்தை பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Trending News