விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படம் 16 நாட்களிலேயே 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை புரிந்ததாக படக்குழு மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்தனர்.
தியேட்டரில் மாஸ்டர் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டு ஒரு சில சர்ச்சைகள் எழுந்தாலும், தியேட்டரில் ரசிகர்கள் கூடுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஃபாரின் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை ஜெகதீஷ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படம் வெற்றி அடைவதற்காக பாராட்டு தெரிவிப்பதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவரைக்கும் எந்த படத்திலும் இடம்பெறாதது போல் வித்தியாசமாக இருந்ததாகவும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.
அந்த புகைப்படத்தில் அனிருத் ஷு லேஸ் ஒழுங்காக கட்டாமல் இருந்துள்ளார். அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் எருமை மாடு மாதிரி இருக்க ஒரு ஷு லேஸ் கூட கட்ட தெரியாதா என வடிவேலு பாணியில் சமூக வலைத்தளத்தில் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.