பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஸ்பாட் லைட் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அபிஷேக். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் அனைவரையும் பேட்டி எடுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமானார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார் அபிஷேக் அப்போது நிருபர் சூர்யா பற்றிய கேள்வியை அபிஷேக்கின் முன்னிலையில் வைத்தார். அதாவது சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியானது.
அதனால் பல தியேட்டர் உரிமையாளர்கள் இனிமேல் சூர்யா நடிக்கும் படத்தை எங்கள் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என கூறி வந்துள்ளனர். இனி சூர்யா நடிக்கும் படங்கள் எல்லாமே OTT தளத்தில் தான் வெளியாகும் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அபிஷேக் இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வருகிறது என்று சொல்லிவிட்டு. சன் பிக்சர்ஸ் சூர்யா பாண்டிராஜ்வுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சப்போர்ட் செய்யாமல் இருப்பார்கள் கண்டிப்பாக தியேட்டரில் உரிமையாளர்கள் இப்படத்தை வாங்குவார்கள் என கூறினார்.
மேலும் வீட்டில் எப்படி அண்ணன் தங்கச்சி சண்டை போட்டுக் கொள்வார்கள் பின்பு ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது போல் தான் சூர்யாவும் தியேட்டர் உரிமையாளர்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் அதேபோலத்தான் படங்கள் வெளிவந்தால் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட ஒரு சில ரசிகர்கள் சூர்யா மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சண்டை போடுவது போல் போட்டு பின்பு ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். இதனை பார்க்கும் பொழுது நம்மளை முட்டாள் ஆக்குவதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.