தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஒருவரின் வீட்டை கவர்ச்சி நடிகை ஒருவர் வாங்கியுள்ளாராம். இதற்காக பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தமிழன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முதலாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.
2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா நடித்த முதல் படம் தமிழில் தான். அதுவும் விஜய் நடித்த தமிழன் திரைப்படம் தான். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
தற்போது பாலிவுட்டையும் தாண்டி பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் தன்னை விட 10 வயது குறைவான பாடகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செம மஜாவா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மும்பை நகர பகுதியில் அவருக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருந்துள்ளது.
அதனை ஹிந்தி சினிமாவின் சமீபத்திய கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவருக்கு 7 முதல் 8 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். அதிகமாக வெளிநாட்டிலேயே தங்கி விடும் பிரியங்கா சோப்ரா இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சில வீடு மற்றும் நிலங்களை விற்று விடலாம் என முடிவு செய்துள்ளாராம்.
அந்த வீடு வாங்கிய பிறகுதான் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையில் மாற்றமே ஏற்பட்டதாம். அந்த அதிர்ஷ்டத்தை நம்பி தற்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரியங்கா சோப்ராவின் வீட்டை வாங்கி உள்ளார் என்கிறார்கள் பாலிவுட் வாசிகள்.