சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முன்னாள் கணவரை நாயுடன் ஒப்பிட்டு கிண்டலடித்தாரா VJ ரம்யா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒரு சிலருக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி ரசிகர்களின் விருப்பமானவராக இருப்பவர்தான் VJரம்யா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

தற்போது படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ரம்யா. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டீசரில் கூட இவரது வசனம் தான் செம டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரம்யா விரைவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். போர் அடிக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பொழுதைக் கழிப்பார்கள்.

அந்த வகையில் vj ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார், அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு கொஞ்சமும் முகம் சுளிக்காமல் பதில் கொடுத்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ரம்யா, தான் வளர்க்கும் நாய் குட்டியை காட்டிவிட்டு நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார். ரம்யா மனிதர்கள் மேல் வைக்கும் காதலை விட நாய் மீது வைக்கும் காதலில் நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

vjramya-insta-live
vjramya-insta-live

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் தங்களுடைய நாரதர் வேலையை சரியாக செய்து விட்டனர். திருமணமான 10 நாளில் தனது கணவருடன் சண்டை போட்டு வந்த ரம்யா தற்போது மீண்டும் தன்னுடைய கணவரை குத்திக் காட்டுகிறார் என கிளப்பி விட்டு விட்டார்கள். எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக சும்மாயிருந்த ரம்யாவை நேரடியாக வரவைத்து வம்பில் மாட்டி வைத்துள்ளனர்.

Trending News