தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தற்போதைய காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சில படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்.
அதற்காக இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா வாங்கிய கூலாங்கல் என்ற முதல் படமே விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஆயிரம் நடிகைகள் வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே நிரந்தரமாக ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நயன்தாரா.
கிளாமர் காட்டுவதிலும் சரி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பதிலும் சரி, நயன்தாராவுக்கு நிகர் நயன்தாரா தான். மேலும் அன்று முதல் இன்று வரை தன்னுடைய உடல் எடையை சரியாக பராமரித்து வரும் நயன்தாராவின் டீ சர்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.