விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித்தின் வலிமை படம் தான் நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்து வருகிறது. மேலும் கிட்டத்தட்ட ஒருவர் வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தும் படத்தின் எந்த ஒரு அப்டேட்டயும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.
இந்நிலையில் வலிமை படத்தை பற்றி ஏதாவது ஒரு சின்ன விஷயம் வெளியில் வராதா என தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர். தற்போது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வலிமை படத்தின் ஓபனிங் பாடல் காட்சி உருவாகி விட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு செம மாஸாக இந்த பாடல் வந்திருப்பதாகவும் கூறி தல ரசிகர்களை வெறியேற்றி விட்டார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் அதாரு உதாரு பாடல் எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலிமை படத்தில் தல அஜீத்துக்காக ஓபனிங் பாடல் எழுதியுள்ளாராம்.
அதாரு உதாரு பாடலின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது அதையும் மிஞ்சும் அளவுக்கு வலிமை ஓபனிங் பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வெளியான அடுத்த நிமிடமே தல ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து விட்டனர்.
மேலும் வலிமை படத்தின் ஓபனிங் பாடல் காட்சி நடைபெறும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் என சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன. வலிமை சிங்கிள் ரிலீஸுக்காக தல ரசிகர்கள் தாறுமாறாக வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.