தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மீது அவ்வளவு சீக்கிரத்தில் வெறுப்பை காட்ட மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட சூர்யாவையே வெறுப்பாக வைத்த நடிகை ஒருவர் உள்ளாராம்.
வாரிசு நடிகராக வரவேற்கப்பட்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் சூர்யா. ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வந்த சூர்யாவுக்கு 2000 முதல் 2010 வரை பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த கால கட்டங்களில் சூர்யாவை பார்த்து பயப்படாதே நடிகர்களே கிடையாது.
காரணம் சூர்யாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. ஆனால் அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த சில வருடங்களாகவே தொடர் தோல்வி படங்களை தான் கொடுத்து வருகிறார். இதை சமீபத்தில் வந்த சூரரைப்போற்று திரைப்படம் மாற்றியுள்ளது.
மீண்டும் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் சூர்யா முன்னால் ஒரு படத்தில் நடிகை மீது செம வெறுப்பாகி படப்பிடிப்பை விட்டு கிளம்பி விட்டாராம். அந்த அளவுக்கு ரோமன்ஸ் டார்ச்சல் செய்தாராம் அந்த நடிகை.
சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல முன்னாள் நடிகர் தேங்காய் சீனிவாசன் என்பவரின் பேத்தி ஸ்ருதிகா நடித்தார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 14 வயதுதான். ஸ்ரீ படத்தில் சூர்யாவுடன் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்ருதிகாவுக்கு நடிக்கவே வரவில்லையாம்.
இதனால் சூர்யா என்ன செய்வதென்றே தெரியாமல் செம கடுப்பாகி விட்டாராம். மேலும் அந்த பெண்ணுடன் காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என கையெடுத்து கும்பிட்டு விட்டாராம். இதனை ஸ்ருதிகா ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.