செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அஞ்சலி படத்தில் நடித்த 5 குழந்தைகள் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? இதில் ஒருத்தர் அஜித்தின் வெற்றி பட இயக்குனர்

ரகுவரன் நடிப்பில் வெளியானது அஞ்சலி, இப்படத்தில் ரேவதி மற்றும் ஷாமிலி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் 5 சிறு வயது குழந்தைகள் நடித்து இருப்பார்கள்.

அஞ்சலி படம் ஓடியதற்கு ஒருபக்கம் ரகுவரன் காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த சிறு குழந்தைகள் நடித்த காட்சிகள் மூலம் தான் ரசிகர்கள் அதிகம் இப்படத்தினை ரசிக்க ஆரம்பித்தனர். இப்படம் வெளியாகி 30 வருடங்களை கடந்துவிட்டது. அஞ்சலி படத்தில் நடித்த குழந்தைகள் தற்போது என்னவானார்கள் தெரியுமா.?

தருண்: அஞ்சலி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தருண். இவர் புன்னகை தேசம், மீரா மற்றும் எனக்கு 20 உனக்கு 18 போன்ற தமிழ் படங்களில் மட்டும் நடித்து உள்ளார். தெலுங்கிலும் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி உள்ளன.

tharun
tharun

பேபி ஷாமிலி: விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ராஜநடை என்ற படத்தின் மூலம் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகுதான் இவர் அஞ்சலி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கதாநாயகியாக நடித்து வெளியான திரைப்படம் வீர சிவாஜி.

shamili
shamili

ஆர்த்தி: என்ன கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார் ஆர்த்தி. அதன்பிறகு இவர் அஞ்சலி படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடியனாக நடித்து வெளியான மலைக்கோட்டை, தாமிரபரணி, படிக்காதவன் மற்றும் குருவி என பல படங்கள் அடுக்கி கொண்டே போகலாம்.

aarthi
aarthi

விஷ்ணுவர்த்தன் மற்றும் கிருஷ்ணா: விஷ்ணுவர்த்தன் மற்றும் கிருஷ்ணா இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். அஞ்சலி படத்தில் காலனியில் தங்கி இருக்கும் குழந்தைகளின் கதாபாத்திரத்தில் விஷ்ணுவர்த்தன் மற்றும் கிருஷ்ணாவும் நடித்துள்ளனர்.

ஆனால் விஷ்ணுவர்த்தன் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி அஜித் உட்பட பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். கிருஷ்ணா நடிப்பில் கவனம் செலுத்தி கழுகு, யாக்கை மற்றும் மாரி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

krishna-cinemapettai
krishna-cinemapettai

ரிச்சர்ட்: அஞ்சலி படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரிச்சர்ட். அதன் பிறகு திரௌபதி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

richard-3
richard-3

மேற்கண்ட நடிகர்கள் அனைவருமே அஞ்சலி படத்தில்  குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் தற்போது நடிகர்களாக பல படங்களில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News