சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இந்திய சினிமாவே கவனிக்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார். இதனால் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் யார்? என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுதா கொங்கராவுக்கு பெரிய அளவு முதல் படம் வெற்றியை தரவில்லை. அந்த படம் வெளியாகி சரியாக ஆறு வருடங்கள் கழித்து மாதவனை வைத்து இறுதிச்சுற்று என்ற படத்தை எடுத்தார்.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவான இறுதிச்சுற்று திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்த மாதவனுக்கு மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது சுதா கொங்கரா படம்.
அதேபோல் நீண்ட நாட்களாக தோல்வி கொடுத்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்தின் மூலம் மீண்டும் அவருடைய மார்க்கெட் சூடு பிடிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளார். அந்த வகையில் அடுத்து தளபதி விஜய்க்கு ஒரு கதை கூறியதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தளபதி 65 படத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். அதே கதையை தல அஜித்திடம் கூறியுள்ளாராம் சுதா கொங்கரா. கதை முழுவதும் கேட்ட பிறகு தல அஜித் இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையாம். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தல அஜித் சுதாவை அழைத்து படவாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.
வலிமை படத்தின் இறுதிகட்ட நிலையில் இருக்கும் அஜித் தல61 இயக்குனர் வினோத்தா? சுதாவா? என்ற யோசனையில் இருக்கிறாராம் அஜித் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. பெரும்பாலும் ஓட்டுகள் சுதாவுக்கு தான் விடுகிறதாம். காரணம் ஏற்கனவே வினோத் அஜித்துடன் இரண்டு படம் பணியாற்றியது தான் என்கிறார்கள்.