ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அங்காடித்தெரு இயக்குனருடன் ஹீரோவாக களமிறங்கும் மாஸ்டர் பட வில்லன்.. அலற வைக்கும் அப்டேட்!

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனது பெருமையை நிலைநாட்டியவர் தான் அர்ஜுன் தாஸ். இவரது வசீகர தோற்றத்திற்கும், கணீர் குரலுக்கும் தனி ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளது.

மேலும் அர்ஜுன் தாஸ் அட்லி தயாரிப்பில் வெளியான ‘அந்தகாரம்’ என்கின்ற படத்தில் ஹீரோவுக்கு நிகரான ரோலில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அர்ஜுன் தாசுக்கு அடுத்தடுத்த பல பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் வெள்ளித்திரையில் ஹீரோவாக கால்பதிக்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் வசந்தபாலன், தன்னுடைய பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவான அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்க உள்ளாராம். ஏற்கனவே வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன் போன்ற வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

dushara-vasanthabalan
dushara-vasanthabalan

அதேபோல் ஜிவி பிரகாஷ், அபர்ணதி ஆகியோரை வைத்து வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படி ஒரு நிலையில் வசந்தபாலன் அவரது தயாரிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக நடிக்க வைக்க இருக்கிறாராம்.

இதுகுறித்து அர்ஜுன் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குனர் வசந்தபாலன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து இந்த புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மக்களின் ஆசிர்வாதமும் பிரார்த்தனைகளும் தேவை என்றும் தெரிவித்திருக்கிறார்.

arjun-dass
arjun-dass

போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் இந்த படத்தின் ஹீரோயினாக களம் இறங்க உள்ளாராம். மேலும் அர்ஜுன் தாஸின் இந்த பதிவும், புதிய படம் பற்றிய அறிவிப்பும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Trending News