வினோத் இயக்கும் வலிமை படத்திற்கு பிறகு தல அஜித் எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது தான்.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் வலிமை படத்திற்கு பிறகு தல 61 படத்திற்காக ஏற்கனவே சுதா கொங்கரா, விஷ்ணுவர்தன், ஏஎல் விஜய் போன்றோர் கதைசொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அஜித் சுதா கொங்கரா கூட்டணி அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுசம்பந்தமாக ஜிவி பிரகாஷ் கூட ஒருமுறை ட்விட்டரில் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆனால் அதன் பிறகு அந்தப் படத்தைப் பற்றிய பேச்சு மூச்சு இல்லை. இந்நிலையில் வலிமை படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு வார காலம் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் விரைவில் படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளனர். அதன் பிறகு ஓய்வு எடுக்காமல் உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் தல அஜித்.
அதற்காக வலிமை படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் போனிகபூர் வினோத்திடம் வேறு ஏதாவது கதை இருக்கிறதா என கேட்க, அவரும் இருக்கிறது என்று சொல்ல, அதிரடியாக உருவாகிறதாம் தல 61 திரைப்படம். இருந்தாலும் தல அஜித் இன்னும் மௌனம் காத்து வருவதாக கூறுகின்றனர். அஜித் சுதா கொங்கரா கூட்டணி இணைந்தால் புதிய பரிமாணத்தில் தல அஜித் படம் இருக்கும். என்ன பண்ணப் போறாரோ தல?