ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நயன்தாராவின் அடுத்த படம்.. வித்தியாசமான டைட்டிலுடன் வெளியான போஸ்டர்

நயன்தாராவுக்கு மட்டும் வயது ஏற ஏற படவாய்ப்புகளும் மலைபோல் குவிந்து வருகிறது. அந்த வகையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சோலோ ஹீரோயின் கதைகளில் நடித்து வருகிறார்.

நயன்தாரா சமீபகாலமாக படங்களில் நடிப்பதை தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தொடர்ந்து பல சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே கூழாங்கல், நெற்றிக்கண் போன்ற படங்கள் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஸ்டிராபெரி காதல் வித்தியாசமான டைட்டில் கொண்ட படத்தை தயாரிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தை விநாயக் என்பவர் இயக்க உள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் தயாரிப்பு முடிவு பலரையும் கவர்ந்துள்ளது. இதேபோல் பல முன்னணி நடிகைகளும் சின்ன சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

nayanthara-next-production
nayanthara-next-production

படங்களில் நடித்து புகழ் பெறுவதை காட்டிலும் ஒரு நல்ல படத்தை தயாரித்து அதன் மூலம் விருதுகள் வாங்கினால் மேலும் தங்களுடைய புகழ் மேலும் உயரும் என பல முன்னணி நடிகைகள் அந்த வேலையில் இறங்கிவிட்டார்களாம்.

Trending News