இந்தியன் 2 படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தற்போது ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ள செய்தி சமீபத்தில் வெளியானது.
தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் பான் இந்தியா படமாகவும் உருவாக உள்ளதாம்.
சங்கர் சமீபகாலமாக தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானுடன் பணியாற்றுவதை குறைத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
தற்போது அதே கூட்டணியை ராம்சரண் படத்திற்கும் தொடர சங்கர் ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே அனிருத் தெலுங்கில் சில பிளாக்பஸ்டர் பாடல்களை கொடுத்துள்ளதால் தற்போது ராம்சரன் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்த செய்தி தான் கோலிவுட் வட்டாரங்களில் உள்ள மற்ற இசையமைப்பாளர்கள் வயிறெரிய செய்துள்ளதாம். ஏற்கனவே தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் அனிருத் வசம்தான் உள்ளது.
தற்போது மற்ற மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள அனிருத்தை பார்த்து, எங்களுக்கும் கொஞ்சம் படம் குடுங்க அண்ணே எனக்குக் கெஞ்சாத குறைதானாம்.