தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு இன்னும் நிஜப்பெயர் தெரியாமல் இருக்கும் நடிகர்களை பற்றி பார்ப்போம்.
சாம்ஸ்: தமிழ் சினிமாவில் காமெடியாக பல படங்களில் நடித்தவர் சாம்ஸ். இவர் ஆறு, மனங்கொத்தி பறவை, அறை எண் 305 மற்றும் தேசிங்குராஜா போன்ற பல படங்கள் நடித்துள்ளார். படத்தில் இவரை பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் அடையாளம் கண்டு விடுவார்கள். ஆனால் இவருடைய இயற்பெயர் இன்று வரை சில ரசிகர்களுக்கு தெரியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரவி மரியா: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் ரவி மரியா. தேசிங்குராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் காமெடி வில்லனாக நடித்து இருப்பார். அதிலும் குறிப்பாக எழில் படத்தில் இவர் செய்த காமெடி அனைத்துமே ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தன. இவரை அடையாளம் தெரியுமே தவிர இவரது இயற்பெயர் இன்று வரை சில ரசிகர்களுக்கு தெரியாது.
சுவாமிநாதன்: தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சுவாமிநாதன். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தேசிங்கு ராஜா மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக டேமீட் என்ற வசனத்தை சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வந்துவிடும் அந்த அளவிற்கு பிரபலமானார். ஆனால் இவரது இயற்பெயர் சுவாமிநாதன் என்பது இன்று வரை சிலருக்கு தெரியாது.
கிரேன் மனோகர்: நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கிரேன் மனோகர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சாமி படத்தில் விக்ரம் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடுவார். அதற்கு கிரேன் மனோகர் என்னய்யா பீர்ர மோர் ஆக்கிட்ட எனக் கூறுவார். இந்த வசனம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. ஆனால் இவர் பெயர் இன்று வரை சில ரசிகர்களின் மனதில் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நடிகர்களைத் தவிர செல்லத்துரை ஒரு படத்தில் பிரபா ஒயின் ஷாப் ஓனரா எனக்கூறும் வசனமும் ரசிகருடன் பிரபலமானது. ஆனால் இவர் பெயரும் இன்று வரை சில ரசிகர்களுக்கு தெரியாது. இந்த வரிசையில் நெல்லை சிவா, இடிச்சபுளி செல்வராஜ், பசி நாராயணன், அனு மோகன் மற்றும் வெங்கல் ராவ் போன்ற பல நடிகர்களின் முகங்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி உள்ளது மேலும் இவர்களது காமெடியும் பிரபலமானது. ஆனால் இவர்களது இயற்பெயர் சில ரசிகர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.