தமிழ் சினிமாவில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராம்கி. அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ராம்கி நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என செந்தூரப்பூவே, மருதுபாண்டி, இணைந்த கைகள் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஹீரோ மார்க்கெட்டை இழந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டியிருக்கும் ராம்கி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் வேட்டை நாய். தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடித்துள்ள வேட்டை நாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அதில் பார்ப்பதற்கு ராம்கி, கபாலி மற்றும் காலா படத்தில் வந்த ரஜினி கெட்டப்பில் கருப்பு முடி வெள்ளை தாடி என டோட்டலா வேற லெவல் ஸ்டைலிஷ் ஆக மாறிவிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
இனிமேல் ராம்கி தொடர்ந்து பல படங்களில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளாராம்.