சினிமாவில் நடிகர்கள் ஆனபிறகு நடிகைகளுடன் ஒட்டி உரசி நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அதிலும் பெரும்பாலும் திருமணமான நடிகர்கள்தான் அதிக அளவு படங்களில் நடித்து வருகின்றனர்.
ஏன் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றோர் கூட தங்களது படங்களில் நாயகிகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளில் நடித்து வருகின்றனர். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
அந்த வகையில் சமீபகாலமாக வில்லன் நடிகராக இருந்த ஹீரோவாக மாறத் துடிக்கும் பிரபல நடிகர் ஒருவர் நடிகைகளுடன் உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நடிக்கிறாராம். அவரது மனைவியும் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ஓகே சொல்லி விடுகிறாராம்.
இதனால் அந்த நடிகர் செம குஷியில் இருக்கிறாராம். அப்படித்தான் சமீபத்தில் வந்த நடிகர் நடித்த படம் ஒன்றில் இளம் நடிகை ஒருவருடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.
தமிழ் சினிமாவின் கஞ்சா ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் ஒருவரின் படத்தில் மோசமான வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் தான் அந்த தயாரிப்பாளரும் நடிகரும். வில்லனாக தன்னுடைய திறமையை நிரூபித்த அந்த நடிகர் ஹீரோவாகவும் பெரிய அளவு வெற்றிப்படம் கொடுப்பேன் என சூடம் ஏற்றி சத்தியம் செய்துள்ளாராம்.
முன்னணி நடிகர் ஒருவரின் படத்துடன் அவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரின் ரசிகராக அந்த நடிகர் நடித்த படம் படுதோல்வியை சந்தித்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் நான் ஹீரோவாக போகிறேன் என கோலிவுட்டில் முட்டிமோதி கொண்டிருக்கிறார்.