ஜான் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பூமி இப்படத்தில் ஏகாம்பரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜான் விஜய் பேசிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை மக்களிடமும் சரி, பத்திரிக்கையாளர்களிடம் சரி பயப்படாமல் தன் மனதில் தோன்றியதை தைரியமாக பேசக்கூடியவர்கள் ஒரு சிலர் தான். அந்த வரிசையில் ஜான் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான் விஜய்யிடம் பல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது யாருக்கும் பயப்படாமல் தன் மனதில் தோன்றியதை தைரியமாக கூறிவந்தார்.
அப்போது ஜான் விஜய் தான் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது பார்ட்டிக்காக பல சரக்குகள் வரும், அப்போது சிம்பு போன் செய்து ஜான் விஜய்யிடம் அண்ணா ஏதாவது ஒரு சரக்கு கிடைக்குமா நம்ம ரெண்டு பேரும் சரக்கு அடிக்கலாமா என கேட்டதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஜான் விஜய் நான் எப்போதும் சந்தோசமாக இருக்க கூடிய நபர் அதனால் தான் நம்மளும் சந்தோசமா இருக்கணும் நம்மளை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசியதாக கூறியுள்ளார்.