திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

40 வயது இயக்குனரை காதலிக்கும் 23 வயது அனு இமானுவேல்.. அவர் பெரிய தயாரிப்பாளரின் மகனாச்சே!

2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். அதற்கு முன்பே சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை கவர்ந்தவர். அதற்கு முன்னரே துப்பறிவாளன் எனும் படத்தில் நடித்திருந்தார். 23 வயதான அனு இம்மானுவேல் தற்போது 40 வயது இயக்குனர் ஒருவருடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஈர் உயிர் ஓர் உயிருமாய் இருவரும் ஒட்டிக்கொண்டு கிடக்கிறார்கள். அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், காதலை கொண்டாடுவதும் என ஜெகஜோதியாக இருப்பதாக அக்கட தேசத்தில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ஆக்சிஜன்.

இந்த படத்தை இயக்கியவர் தான் ஜோதி கிருஷ்ணா என்ற 40 வயது இயக்குனர். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்சிஜன் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

anuemmanuel-cinemapettai
anuemmanuel-cinemapettai

இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்குள்ளும் காதல் தீ கொழுந்துவிட்டு எரிகிறதாம். அந்த தீயை அணைக்க அவ்வபோது இருவரும் சுற்றுலா தலங்களுக்கு ஜோடியாக கிளம்பி விடுகிறார்களாம். வழக்கம்போல் எல்லா நடிகைகளும் செய்வது போல அனு இமானுவேல் தற்போது வரை தன்னுடைய காதலைப் பற்றி வாய் திறக்க வில்லை என்பதும் கூடுதல் தகவல்.

இந்த செய்திதான் அக்கட தேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் சினிமாவில் அனு இமானுவேல் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்து கொண்டு கிளம்பி விடுவாரோ என அச்சத்தில் இருக்கிறார்களாம்.

Trending News