தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஜகமே தந்திரம். கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் தற்போது விரைவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
தனுஷ் தன்னுடைய கேரியரில் மிகவும் எதிர்பார்த்த படமாக ஜகமே தந்திரம் படத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருந்தார் தனுஷ். மேலும் ஜகமே தந்திரம் படத்தில் வரும் சுருளி கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்ததாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகுமார் தனுஷின் கோரிக்கையையும் மீறி நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார். இதனால் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில்கூட தனுஷ் ஜகமே தந்திரம் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் என நம்புவோம் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஜகமே தந்திரம் டீசரை சாதாரணமாக வெளியிட்டது. இதுவே தியேட்டரில் படம் வெளியாகியிருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் புரோமோஷன் செய்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த ஓடிடி விவகாரத்தில் தனுஷ் செம கோபத்தில் இருப்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. தற்போது ஹாலிவுட் பட ஷூட்டிங்கில் இருக்கும் தனுஷ் இன்று காலை வெளியான ஜகமே தந்திரம் டீசரை தற்போது வரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்.
இதுவே இருவருக்கும் உள்ள பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் டீசரை பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க வேண்டிய படத்தை இப்படி செய்து விட்டார்களே என புலம்பி தவிக்கின்றனர்.