இந்திய பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு எப்போதுமே ரசிகர்களுக்கு ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வரிசையில் பிரபலங்கள் இரட்டை குழந்தைகள் யார் யார் பெற்றெடுத்தனர் என்பதையும் அவர்களது குழந்தைகளின் புகைப்படத்தையும் பார்ப்போம்.
பரத்: பாய்ஸ் படத்தின் அறிமுகமான பரத் அதன்பிறகு காதல், செல்லமே மற்றும் ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது சின்ன வயது நண்பரான ஜெசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
![bharath family](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/bhrath-family.jpg)
பிரஜன்: டிஷ்யூம் படத்தின் மூலம் அறிமுகமான பிரஜன். அதன் பிறகு சா பூ திரி, பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் லவ் ஆக்சன் போன்ற படங்கள் நடித்துள்ளார். இவர் படங்களில் நடித்து பிரபலமான கைவிட சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தார். பிரஜன் சான்ட்ரா எமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
![prajin family](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
சிங்கப்பூர் தீபன்: அது இது எது மற்றும் சிரிச்சா போச்சு போன்ற ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் சிங்கப்பூர் தீபன் அது மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சுகன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் இவருக்கும் ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
![singapore deepan family](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
சந்தோஷி: பெண்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷி. அதன்பிறகு பாபா, பாலா மற்றும் ஆசைஆசையாய் போன்ற படங்களில் நடித்துள்ளார். சந்தோஷிக்கும் முதலில் ஒரு ஆண் குழந்தையும் தற்போது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
![santhoshi family](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அர்ஜுனன்: காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அர்ஜுனன். அதன் பிறகு அரிமா நம்பி, டிக் டிக் டிக் மற்றும் சூரரைப்போற்று போன்ற படங்களில் நடித்துள்ளார். அர்ஜுனன் காயத்ரி என்பவரை திருமணம் செய்து ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
![arjunan family](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)