மலையாளத்தில் வெற்றி பெறும் படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் பல இயக்குனர்கள் இறங்கியுள்ளனர். அதில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கேஎஸ் ரவிக்குமாரும் ஒருவர்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கேஎஸ் ரவிக்குமார் தற்போது தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். மடமடவென படப்பிடிப்புகள் தொடங்கி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.
இந்நிலையில் கூகுள் குட்டப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மனோபாலா சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார் வயதான தோற்றத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் மலையாளத்தை விட தமிழில் இன்னும் காமெடிகளை அதிகமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறதாம். கோடை விடுமுறையை குறிவைத்து இந்த படம் உருவாகி வருகிறதாம். முக்கியமாக குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாம்.
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு கூகுள் குட்டப்பன் படத்திற்கு கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.