புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இணையத்தில் கசிந்த விஜய்யின் தளபதி 65 கதாபாத்திரம்.. சோலி முடிஞ்சு போச்சு என கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட தளபதி ரசிகர்களே இது வேண்டாம் எனும் அளவுக்கு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றுவதை நிறுத்திவிட்டு இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் கோலமாவு கோகிலா டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் என்பவருடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களை கவர்ந்தது.

அந்த வீடியோவில் துப்பாக்கி குண்டுகள், கார் சேசிங் என மிரட்டலாக இருந்ததால் தளபதி 65 படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் அப்படியே எதிர்மறையாக உள்ளதாக கூறுகின்றனர்.

thalapathy65-cinemapettai-01
thalapathy65-cinemapettai-01

இப்படத்தில் தளபதி 65 படத்தில் விஜய் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை சமீபத்தில் வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய யூடியூப் தளத்தில் பேசிக்கொண்டதன் மூலம் இந்த செய்தி செம வைரல் ஆனது. ஆனால் படத்தின் அறிவிப்பு வீடியோவுக்கும் இவர்கள் சொன்ன விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரசிகர்கள் அப்போதே கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வந்தனர்.

இருந்தாலும் சர்கார் படத்தை நினைவில் கொண்டுவந்த ரசிகர்கள் மீண்டும் அரசியல் படமா எனவும் ஒரு பக்கத்தில் கவலையில் உள்ளனர். படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பிரமாண்டமாக இருந்தாலும் படம் வெளியாவதற்குள் விஜய் படம் படாதபாடு பட்டுவிடுமே என தளபதி ரசிகர்கள் இப்போதே கவலையில் ஆழ்ந்துள்ளனர். இருந்தாலும் தளபதி 65 படம் வெளிவரும்வரை இது போன்ற நிறைய வதந்திகளை இன்னும் எதிர்பார்க்கலாம்.

Trending News