தமிழ் சினிமாவில் தற்போதைக்கு அதிக வியாபாரம் உள்ள நடிகராக உருவெடுத்துள்ளவர் விஜய். கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வியாபாரத்தை மிஞ்சிவிட்டார் என பல பேர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.
கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படம் நினைத்தபடி சரியாக போகாததால் மார்க்கெட் ரீதியாக ரஜினிக்கு கொஞ்சம் சரிவு ஏற்பட்டுள்ளதாம். ஆனால் அதை கண்டிப்பாக அண்ணாத்த படம் மாற்றி விடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு படம் தரமாக உருவாகி வருகிறதாம்.
இது ஒருபுறமிருக்க கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் அனைத்துமே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளன. இதனால் விஜய்யின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து விட்டது. பிகில் படத்திற்கு 50 கோடி வாங்கிய விஜய் அடுத்ததாக வெளிவந்த மாஸ்டர் படத்திற்கு 80 கோடி வாங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தளபதி 65 படத்தில் 100 கோடி சம்பளம் பேசி நிலையில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் 80 கோடி போதுமென நிறுத்திக்கொண்டார். ஆனால் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 படத்தில் தன்னுடைய சம்பளம் நூறு கோடி என்பதை உறுதி செய்து விட்டாராம். இதனால் பழைய சம்பளத்தில் இருந்து 20 கோடியை ஏற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக தர்பார் படத்தில் 104 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம். அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படத்திற்கும் அதே சம்பளம் பேசிய நிலையில் பிறகு சம்பளத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.
இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து அடுத்ததாக உருவாகும் ரஜினி படங்களுக்கு 108 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளாராம். இதனால் தன்னுடைய பழைய சம்பளத்திலிருந்து 4 கோடியை ரஜினி உயர்த்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.