புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நடிக்கும்போதும் விளம்பரம் செய்த நடிகர் விஜய்.. சும்மா இருந்த சூர்யாவையும் கோத்து விட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத வசூல் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கோடிக்கணக்கான வசூலை பெற்று சாதனை படைத்தது.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதிவிஜய் நெல்சன் உடன் ஒரு புதிய கூட்டணி அமைத்து தனது ரசிகர்களுக்காக வித்தியாசமான படத்தை தரவும் முடிவு செய்துள்ளார். சமீபகாலமாக இப்படத்தினை பற்றிய தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் விஜய் ஆரம்பகாலத்தில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஜோய் ஆலுக்காஸ் மற்றும் சன் ஃபேஸ்ட் பிஸ்கட் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.

vijay ads
vijay ads

விஜய் திருப்பாச்சி மற்றும் சச்சின் படங்களில் இவர் நடித்த விளம்பரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். திருப்பாச்சி படத்தில் விஜய் சன் ஃபீஸ்ட்  பிஸ்கட்டில் இருக்கும் ஏஜென்டாக நடித்திருப்பார்.

surya ads
surya ads

அதேபோல் சச்சின் படத்திலும் விஜய் ஒரு காட்சியில் அட நம்ம பிஸ்கட் என்று கூறி சன் ஃபீஸ்ட் பிஸ்கட் காட்டியிருப்பார். பல வருடத்திற்கு முன்பு நடித்து வெளியான இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகளை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் சில செய்திகளை பரப்பி வருகின்றனர் .

இதற்கு ஒரு சில நெட்டிசன்கள் விஜய் மட்டும்தான் விளம்பரம் நடித்துள்ளாரா, ஏன் சூர்யா கூட அதே விளம்பரத்தில் நடித்துள்ளார் படத்தில் பிஸ்கட் சாப்பிட்டும் உள்ளார் என கூறி வருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் யார்தான் விளம்பரங்களில் நடிக்கவில்லை எல்லோரும்தான் நடிக்கிறார்கள் என விஜய்க்கு ஆதரவாக சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Trending News