சினிமாவைப் பொருத்தவரை ஆஸ்காரில் ஒரு விருதாவது வாங்கி விட வேண்டும்என பலரும் நினைப்பது உண்டு. அப்படி இந்தியாவில் பல படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
நாயகன் மற்றும் விசாரணை போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு. பின்னர் ஆஸ்கர் விருதான இறுதி கட்டத்திற்கு கூட செல்லாமல் ஏமாற்றத்தை சந்தித்தன.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமான படங்கள் ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லவில்லை.
மேலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தன.
அப்படி இந்தியாவில் ஆஸ்கர் விருதுகளை ஒரு சிலர் வாங்கியுள்ளனர் அவர்கள் யார் யார் எதற்காக ஆஸ்கர் விருதுகள் வாங்கி உள்ளார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.
பானு அத்தையா. 1982 ஆம் ஆண்டு காந்தியின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்டு வெளியான காந்தி திரைப்படத்திற்காக முதன்முதலாக இந்தியாவை சேர்ந்த பானு அத்தையா என்ற பெண்மணி காஸ்டியூம் டிசைனராக ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார்.

ஏஆர் ரஹ்மான். தமிழிலிருந்து சென்று இசைக்காக ஆஸ்கர் விருது வாங்கிய நாயகன்தான் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக இசையின் பிரிவில் ஜெய் ஹோ பாடல் மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார்.

ரசூல் பூக்குட்டி. ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய ஸ்லம்டாக் மில்லினர் படமான படத்திற்கு ரசூல் பூக்குட்டி சிறந்த சவுண்ட் மிக்ஸிங்காக ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார்.

குல்சார்.ஜெய்ஹோ பாடலுக்காக கோள்சாரம் ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் குல்சார் இருவரும் இதனை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
