சினிமாவில் பொருத்தவரை பலரும் எப்படியாவது ஆஸ்கர் விருதை வாங்கிவிட வேண்டுமென ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நம்ம ஊரில் எப்படி விருதுகளுக்கு பின்னாடி ஏமாற்றுத்தனம் இருக்கிறது அதேபோல்தான் ஆஸ்கர் விருதுகளிலும் பல ஏமாற்றுதனங்கள் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் இருப்பது காரணம் இதுதான். அது என்ன காரணம் எதனால் தமிழ் படங்களுக்கு அதிகமாக ஆஸ்கர் விருது கிடைப்பதில்லை என்பதற்கான காரணத்தை தற்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் அன்றைய காலத்தில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக பல படங்கள் தேர்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெருவாரியான படங்கள் நிராகரிக்கப்பட்டன.
அதற்கு ஒரு காரணம் ஆஸ்கர் விருது பொருத்தவரை எப்போதுமே படங்களில் பாடல்கள் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனாலேயே தமிழ் படங்கள் பெரிய அளவில் ஆஸ்கர் விருது வாங்காததற்கு காரணமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் பிஆர்ஒ மூலம் மார்க்கெட்டிங் செய்து அந்த படங்கள் பற்றி அனைவர்க்கும் தெரியும்படி செய்ய வேண்டும் ஆனால் அதெல்லாம் செய்யாமல் ஆஸ்கரில் பங்கேற்றால் மட்டும் போதாது. அதுவே பெரிய அரசியல்தான்.
சிவாஜி: 1969ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த தெய்வமகன் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்கர் விருதில்லிருந்து நிராகரிக்கப்பட்டது.
மணிரத்னம்: மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் மற்றும் 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படம் இந்த இரண்டு படங்களும் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டன.
பிசி ஸ்ரீராம்: பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குருதிப்புனல். இப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டது.
ஷங்கர்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் மற்றும் ஜீன்ஸ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு பின்பு ஆஸ்கர் விருதில்லிருந்து நிராகரிக்கப்பட்டன.
கமல்ஹாசன்: கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் ஹே ராம். இப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு பின்பு ஆஸ்கர் விருதில்லிருந்து நிராகரிக்கப்பட்டன.
வெற்றிமாறன்: வெற்றிமாறன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டது.
மேற்கண்ட படங்கள் அனைத்தும் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு கடைசியாக இறுதி சுற்று வரை செல்லாமல் பின்பு நிராகரிக்கப்பட்டன.