தமிழில் வெறும் நாலு படங்கள் மட்டுமே இயக்கியுள்ள அட்லி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக வலம் வரும் ஷங்கரை ஓரம் கட்டிய செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காப்பி இயக்குனர் என பலராலும் அதிக கேலி கிண்டல்களுக்கு உள்ளானவர் அட்லீ. அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற முதல்படமே மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தின் காப்பி தான் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் மணிரத்னம் இயக்கிய சத்ரியன் படம் என்ற செய்தியும் வெளியானது. இவ்வளவு ஏன், விஜய் மூன்று வேடங்களில் நடித்த மெர்சல் படம் கூட கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி தான் எனவும் தொடர்ந்து அட்லீ படங்கள் வெளியாகும் போதெல்லாம் இதே போன்ற செய்திகளை கிளப்பி விட்டனர்.
ஆனால் இவை எதுவுமே அட்லீயின் வளர்ச்சியை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மெர்சல் படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிய அட்லீ அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கிய பிகில் படத்திற்கு 20 கோடி வாங்கினார்.
இந்நிலையில் அட்லீ தற்போது நேரடியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்காக அட்லீக்கு 35 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வரும் ஷங்கரை விட 10 கோடி அதிகம் என்கிறார்கள் சம்பள விவரம் தெரிந்த கோலிவுட் வாசிகள்.
ஆம். ஷங்கர் கடைசியாக இயக்கிய கொண்டிருந்த இந்தியன் 2 படத்திற்கு வாங்கிய சம்பளம் 25 கோடி. இந்த 25 கோடி சம்பளம் வாங்குவதற்கு ஷங்கர் 25 வருடம் தமிழ் சினிமாவில் போராடினார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஷங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து தற்போது சம்பள விஷயத்தில் குறுகிய காலத்தில் அவரையே ஓரம் கட்டி அட்லீயை உண்மையில் பாராட்டித்தான் ஆக வேண்டும்.